புழல் ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
அம்பத்துார், அம்பத்துார் அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார், 18; புழலில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக் இன்ஜினியரிங் படித்து வந்தார்.நேற்று முன்தினம், நண்பர்களுடன், புழல் ஏரிக்கு குளிக்க சென்று மூழ்கினார். மதன்குமார் முன்னதாகவே சென்றுவிட்டதாக நினைத்து, நண்பர்களும் சென்றுவிட்டனர்.இந்நிலையில், புழல் எரியில் நேற்று காலை, மதன்குமாரின் உடல் கரை ஒதுங்கியது. அம்பத்துார் போலீசார், உடலை மீட்டு, அவரது நண்பர்களிடம் விசாரிக்கின்றனர்.