உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் மாணவர்கள் நல்லுறவு நிகழ்ச்சி

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் மாணவர்கள் நல்லுறவு நிகழ்ச்சி

சென்னை, அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின், பி.டெக்., மாணவர்களுக்கான ஆறு நாள் நல்லுறவு நிகழ்ச்சி, கலகலப்பாக துவங்கியது. சென்னை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின், பி.டெக்., சேர்ந்துள்ள புதிய மாணவர்களுக்கான, வழிகாட்டும் நல்லுறவுக்கான ஆறு நாள் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. இதில், ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பேசுகையில், ''படிப்புதான் வாழ்வின் முதல்படி. ஒவ்வொரு வெற்றியும் முயற்சியில்தான் துவங்குகிறது. உங்கள் வெற்றி, உங்களின் முயற்சியால்தான் அமையும்,'' என்றார். மாணவர்களை வரவேற்ற அம்ருதா பொறியியல் மற்றும் கணினி பள்ளியின் முதல்வர் ஜெயகுமார், ''திறமையான பொறியாளர்களை உருவாக்குவதே பல்கலையின் முக்கிய நோக்கம்,'' என்றார். நிர்வாக இயக்குநர் ஸம்பூஜ்ய ஸ்வாமி வினயாம்ருதானந்தபுரி பேசுகையில், ''தொழில்நுட்ப திறன்களை சமூக பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்,'' என்றார். முதல்வர் சசாங்கன் ராமநாதன், ''அம்ருதாவின் கண்ணோட்டம், முக்கியமான சாதனைகள் மற்றும் வளாகத்தை முன்னோக்கி நடத்தும்,'' என்றார். நிகழ்வில், ஆராய்ச்சி மாணவர்களின் கட்டுரைகள் அடங்கிய 'விருத்தி' இதழ் வெளியிடப்பட்டது. வரும் 28ம் தேதி வரை நடக்கும் நல்லுறவு நிகழ்ச்சியில், கல்வியாளர்களின் உரைகள், மாணவர்களுக்கான வழிகாட்டுதல் அமர்வுகள், பயிற்சி மையங்கள், கலாசார அமர்வுகள் ஆகியவை நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை