மாணவர் பேட்டி - கார்த்திக், சியாமளா தேவி
தேர்வில் கவனம்படிப்புகளை தேர்வு செய்வதைவிட தரமான, முழு கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்து படியுங்கள். திறமைகளை வளர்க்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். அந்த கல்லுாரியில் மாணவர்கள் பெற்ற வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்துகொண்டு சேருங்கள் என, கல்வி ஆலோசகர் அஸ்வின் வழங்கிய அறிவுரைகள் பயனுள்ளதாக இருந்தது.- கே.கார்த்திக்,பள்ளிக்கரணைஒரே இடத்தில் அனைத்தும்என் தங்கை பிளஸ் 2 படிக்கிறார். கல்லுாரிகள் குறித்த விபரங்களை பெற, வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்தோம். விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரை, அனைத்து நடைமுறைகளையும், ஒரே இடத்தில் பெற முடிந்தது. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.ஆர்.சியாமளாதேவி,ஆவடி.