14வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை
போரூர்: படிப்பு சரியாக வராததால், மன உளைச்சலில் இருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். அய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மைதிலி. இவரது மகன் ஜெய் கிருஷ்ணா, 16. இவர், கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டில் இருந்த ஜெய் கிருஷ்ணா, குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். போரூர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அப்போது அவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், ‘ஜெய் கிருஷ்ணாவுக்கு காது கேட்பதில் சிரமம் இருந்ததால், படிப்பிலும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தார். வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதனால், தனக்கு வாழ விருப்பமில்லை’ என, கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அந்த கடிதத்தை மீட்டு போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.