உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி ஐ.ஐ.டி.,யில் மாணவியிடம் சீண்டல்

கிண்டி ஐ.ஐ.டி.,யில் மாணவியிடம் சீண்டல்

சென்னை:மாணவியிடம் அத்துமீற முயன்ற பீஹார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஐ.ஐ.டி.,யில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 25ம் தேதி இரவு திறந்தவெளி அரங்கம் பின்புறம் நடந்து சென்றார்.அப்போது 'மும்பை சாட்' என்ற கடையில் வேலை பார்த்து வரும் ரவுஷன் குமார், 22, என்பவர், கையில் மரக்கட்டையை வைத்துக் கொண்டு, மாணவியின் கையை பிடித்து இழுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.சாமர்த்தியாக, அவரிடம் இருந்து தப்பிய மாணவி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் இருவரைஅழைத்து வந்துள்ளார். அப்போது வாலிபர் மறைந்துக் கொண்டார்.இந்நிலையில், நேற்று மதியம் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். ேகாட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.பின் மாணவியிடமும், சில்மிஷத்தில் ஈடுபட்ட பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரவுஷன் குமாரிடமும், காவலாளி நிர்வாக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சில்மிஷத்தில் ஈடுபட முயன்றது உறுதியானது. இதையடுத்து, ரவுஷன் குமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி