உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உணவு டெலிவரிக்கு போன மாணவரை கத்தியால் வெட்டி டூ - வீலர், போன் பறிப்பு

உணவு டெலிவரிக்கு போன மாணவரை கத்தியால் வெட்டி டூ - வீலர், போன் பறிப்பு

கோவிலம்பாக்கம்,பள்ளிக்கரணை, காமாட்சி நகர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 20. இவர், ஜல்லடியன்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பகுதி நேரமாக, 'ஸ்விகி' எனும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவர், நேற்று இரவு 10:30 மணி அளவில், கோவிலம்பாக்கம் பகுதியில் உணவு டெலிவரி செய்துவிட்டுவரும்போது, வழியில் இருவர் 'லிப்ட்' கேட்டுள்ளனர். செல்வகுமாரும் வாகனத்தை நிறுத்தி இருவரையும் ஏற்றி உள்ளார். கோவிலம்பாக்கம் அரசு பள்ளி-க்கும் கோவலம்பாக்கம் போலீஸ் பூத்திற்கும் இடையே வரும்போது, இறங்கி கொள்வதாக கூறி இறங்கி உள்ளனர்.திடீரென, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வகுமாரின் தலையில் வெட்டி, அவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர். இந்த கொடூரம் சம்பவம் குறித்து, அப்பகுதியில் சென்றோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து, மேடவாக்கம் காவல் நிலைய ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, செல்வகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை