மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
15-Aug-2025
புதுவண்ணாரப்பேட்டை,காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர்களை கடத்திய, கல்லுாரி மாணவர்களை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, காசிமேட்டை சேர்ந்தவர் கிங்ஸ்டன், 21; தனியார் நிறுவன ஊழியர். கிங்ஸ்டன், நேற்று தன் நண்பர்களுடன் புதுவண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தார். அங்கு காரில் காத்திருந்த ஐந்து பேர், பேச வேண்டுமென கூறி கிங்ஸ்டனையும், அவரது நண்பர் ரோகித் என்பவரையும் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதை பார்த்து கொண்டிருந்த கிங்ஸ்டனின் மற்ற நண்பர்கள், காரை பைக்கில் பின் தொடர்ந்தனர். காசிமேடு அருகே கார் வந்த போது, கதவை திறந்து இருவரும் தப்ப முயன்றனர். பின்னால் பைக்கில் நண்பர்கள் காரை முற்றுகையிடவே, மோகன்தாஸ் உள்ளிட்ட ஐவரும் காரை அங்கேயே விட்டு தப்பியோடினர். இதுகுறித்து கிங்ஸ்டனின் அத்தை, புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், கல்லுாரி மாணவர்களான, வேளச்சேரியை சேர்ந்த மோகன்தாஸ், 21, ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த தனுஷ்ராஜ், 22, பள்ளிக்கரணையை சேர்ந்த சாய்பிரசன்னா, 21, பெருங்குடியை சேர்ந்த யது கிருஷ்ணன், 21, பள்ளிக்கரணையை சேர்ந்த அபிஷேக், 21 ஆகிய ஐவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்தனர். இவர்களில் மோகன்தாஸ் என்பவர், கல்லுாரி மாணவியை காதலித்து வந்துள்ளார். கிங்ஸ்டனும், அக்கல்லுாரி மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த மோகன்தாஸ், தன் நண்பர்களுடன் சேர்ந்து கிங்ஸ்டன் மற்றும் அவரது நண்பர் ரோகித்தை அடித்து மிரட்டுவதற்காக கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஐவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
15-Aug-2025