மேலும் செய்திகள்
பெண் காவலரிடம் வழிப்பறி; வாலிபருக்கு தர்ம அடி
17-Feb-2025
பழவந்தாங்கல், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், வாலிபர்கள் இருவர் ரயில்களில் ஏறாமல் சுற்றி வந்தனர். அவர்களிடம் கத்தி இருந்துள்ளது. இதனால், பயணியர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.அங்கு வந்த பழவந்தாங்கல் போலீசாரை கண்டதும், கத்தியுடன் இருந்த வாலிபர் தப்பி ஓடினார். நாற்காலியில் அமர்ந்திருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை சேர்ந்த பார்த்திபன், 19, என்பதும், சென்னை, பச்சையப்பன் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருவதும், கத்தியுடன் தப்பி ஓடியது, முதலாம் ஆண்டு மாணவர் என்பதும் தெரியவந்தது.இந்நிலையில், மாம்பலம், பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பழவந்தாங்கல் ரயில் நிலையம் சென்றனர்.அப்போது, அங்கு வந்த மின்சார ரயிலில், பயணியருக்கு இடையூறாக அடாவடி செய்த, அதே கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் ஆறு பேரை பிடித்தனர்.பின், பார்த்திபன் உள்ளிட்ட ஏழு பேரையும், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இருவர் கைதுசூளைமேடு, வினோபாஜி தெருவில், நேற்று முன்தினம் இரவு, சூளைமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக மூன்று பேர், ஆட்டோவில் அமர்ந்திருந்தனர்; பட்டா கத்தியும் இருந்தது. இதுபற்றி விசாரித்தபோது, 'ரீல்ஸ் வீடியோ' எடுப்பதற்காக பட்டா கத்தி வைத்திருந்ததாக, அவர்கள் கூறினர்.போலீசாரின் தொடர் விசாரணையில், அரும்பாக்கத்தை சேர்ந்த யுவராஜ், 19, பல்லாவரத்தை சேர்ந்த அலி உசைன் ஷா, 21 என்பதும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது. பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.சூளைமேடு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
17-Feb-2025