உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 37 ஆண்டுகளுக்குப்பின் மாணவர்கள் சந்திப்பு

37 ஆண்டுகளுக்குப்பின் மாணவர்கள் சந்திப்பு

திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை, துாய பவுல் மகாஜன மேல்நிலைப் பள்ளியில், 1988 - 2007 வரையிலான ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் நடந்தது.அதன்படி, 37 ஆண்டுகள் கழித்து, தங்கள் பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், தங்கள் நண்பர்களை பார்த்து, பள்ளி கால அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.வெகு நாட்கள் கழித்து, நண்பர்களை பார்த்த சிலர், கட்டி தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கவிதை, நடனம், பாட்டு, பேச்சு என, அவர்கள் அசத்தினர்.நிறைவாக, 2024 - 2025 ம் கல்வியாண்டில் பள்ளியில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி