உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சாலையில் திடீர் பள்ளம் சோழிங்கநல்லுாரில் நெரிசல்

 சாலையில் திடீர் பள்ளம் சோழிங்கநல்லுாரில் நெரிசல்

சோழிங்கநல்லுார்: குடிநீர் குழாய் சேதமடைந்த இடம் அருகில், சாலையில் திடீர் பள்ளம் விழுந்ததால், சோழிங்கநல்லுாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சோழிங்கநல்லுார் நான்கு வழி சந்திப்பில், பிரமாண்டமான மெட்ரோ ரயில் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக பில்லர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதை ஒட்டி, கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து, பெரிய குடிநீர் குழாய் செல்கிறது. அதையொட்டி, கழிவுநீர் குழாய்களும் செல்கின்றன. சில மாதங்களுக்கு முன், பெரிய குடிநீர் குழாய் சேதமடைந்து, ஐந்து நாட்களாக சீரமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில், அதன் அருகில், நேற்று திடீரென பள்ளம் விழுந்தது. இதில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தடுக்கி விழுந்தார். சுதாரித்த போக்குவரத்து போலீசார், பள்ளத்தில் தடுப்பு அமைத்து, வாகனங்களை நகர்ந்து செல்ல வழி வகை செய்தனர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால், சோழிங்கநல்லுாரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ