உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.டி.எம்., மையத்தில் திடீர் புகை

ஏ.டி.எம்., மையத்தில் திடீர் புகை

சிட்லப்பாக்கம் :குரோம்பேட்டை, ராதா நகரில், எச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம்., மையம் இயங்கி வருகிறது.நேற்று அதிகாலை, இந்த ஏ.டி.எம்., மையத்தில் உள்ள இரண்டு குளிர்சாதன பெட்டிகளில் இருந்து திடீரென புகை வெளியேறியது.அங்கிருந்தோர் இதை பார்த்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாம்பரம் தீயணைப்பு துறையினர், மின் இணைப்பை துண்டித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் பார்த்ததால், பெரிய அளவில் விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ