மேலும் செய்திகள்
நண்பனை கொன்றவர் போலீசில் சரண்
18-May-2025
கொளத்துார், கொளத்துார், சிவானந்த நகரைச் சேர்ந்தவர் சுகன், 28. திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர், கொளத்துார், ராஜமங்கலம் பகுதியில் உள்ள ஆரிய பவன் ஹோட்டலில் காசாளராக, இரண்டு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளார். நேற்று அதிகாலை 1:00 மணியளவில் வேலை உணவகம் பின்னே உள்ள தங்கும் அறையில் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது, அதே ஹோட்டலில் சப்ளையராக பணிபுரியும், எழும்பூரைச் சேர்ந்த மகேஷ், 19, என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த மகேஷ், காலி பீர் பாட்டிலால் சுகனின் தலையில் தாக்கியுள்ளார். மேலும், பாட்டிலை உடைத்து சுகனின் இடுப்பில் குத்தி தப்பினார். காயமடைந்த சுகன், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, நேற்று ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனை அளித்த தகவலின்படி, ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேைஷ கைது செய்தனர்.
18-May-2025