உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர் மேம்பால ப்பணிகள் தீவிரம்

தி.நகர் மேம்பால ப்பணிகள் தீவிரம்

-------------------தி.நகர், மே 25 - தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, புதிய மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்டு 2023 மார்ச்சில் பணிகள் துவக்கப்பட்டன.இரும்பு மற்றும் கான்கிரீட் கலவை கலந்து, 'காம்போசைட் கர்டர்' முறையில் 131 கோடி ரூபாய் செலவில் இரும்பு மேம்பாலமாக அமைக்கப்பட்டு வருகிறது.தி.நகர், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக, அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைகிறது.கடந்த ஆண்டு தீபவாளிக்கு முன் திறக்க திட்டமிட் மேம்பால பணி பல்வேறு தடைகளால் தாமதமானது. மேம்பால பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளன. இன்னும் இரு மாதங்களில் மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி மேம்பால துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி