உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர் - வீராங்கனை அசத்தல்

டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர் - வீராங்கனை அசத்தல்

சென்னை: மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை வீரர் அபினந்த் மற்றும் வீராங்கனை யாஷினி ஆகியோர், முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில டேபிள் டென்னிஸ் போட்டி, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். போட்டிகள், 19 வயதுக்கு உட்பட்ட ஐந்து வயதுகள் பிரிவின் அடிப்படையிலும், ஓபன் பிரிவு, வெட்டரன் மற்றும் கார்ப்பரேட் என மொத்தம் எட்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றன. மூன்று நாள் நடந்த போட்டியின் இறுதி சுற்றுகள் நேற்று முன்தினம் நடந்தது. இதன் ஆடவர் ஓபன் பிரிவில், சென்னை அச்சீவர் அணியின் அபினந்த், ஆர்.டி.டி.எச்.பி.சி., அணியின் உமேஷை எதிர்த்து மோதினார். இதில் அசத்திய அபினந்த் 11 - 9, 11 - 5, 11 - 7, 12 - 10 என்ற செட் கணக்கில் உமேஷை வீழ்த்தினார்.  மகளிர் ஓபன் பிரிவில் சென்னை எஸ்.கே., அணியின் யாஷினி, சென்னை அச்சீவர் அணியின் நித்யஸ்ரீ மணியை எதிர்த்து மோதினார். இதில் யாஷினி 9 - 11, 11 - 6, 12 - 10, 11 - 9, 11 - 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு, சாம்பியன் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை