உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஒரு வாரமாகவே மக்கர் பண்ணுது: தாம்பரம் ரயில் நிலைய நகரும்படிகள்

 ஒரு வாரமாகவே மக்கர் பண்ணுது: தாம்பரம் ரயில் நிலைய நகரும்படிகள்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில், ஒரு வாரமாக நகரும்படிகள் பழுதாகி இருப்பதால், பயணியர் சிரமப்படுகின்றனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தை, தினசரி இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தவில்லை. அங்கிருக்கும் நகரும்படிகள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. அதையும் உடனுக்குடன் சீரமைக்காமல் இருப்பதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, பயணியர் கூறியதாவது: தாம்பரத்தில் இருந்து வெளியூர் ரயில்கள் இயக்குவது அதிகரித்து வருகிறது. இதேபோல், 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல், பயணியர் அவதிப்படுகின்றனர். நடைமேடைகளில் நகரும்படிகள், மின்துாக்கிகள் இல்லை. கிழக்கு பகுதியில் இருக்கும் நகரும்படிகள் பழுதாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் பயணியர், தங்களது உடைமைகளை துாக்கி கொண்டு, படிகளில் ஏறி அவதிப்படுகின்றனர். எனவே, பயணியரின் தேவையை கருத்தில் வைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி