உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரான்ஸ் கடலில் நீந்தி தமிழக வீரர்கள் சாதனை

பிரான்ஸ் கடலில் நீந்தி தமிழக வீரர்கள் சாதனை

சென்னை, சர்வதேச அளவில் ஆங்கில கால்வாய் எனப்படும் பிரிட்டன் முதல் பிரான்ஸ் வரையிலான 42 கி.மீ., கடல்வழி பாதையை 12.10 மணி நேரத்தில் நீந்தி கடந்து, தமிழகத்தின் அகிலேஷ், ஹரிசங்கர் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். ஆங்கில கால்வாய் நீச்சல் சங்கம் சார்பில், சாகச விளையாட்டு புத்தகத்தில் இடம் பெற, 'லாங்க் டிஸ்டன்ஸ்' நீச்சல் சாகச நிகழ்வு, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் டோவர் நகர் முதல் பிரான்ஸ் நாட்டின் கலேஸ் வரை நடந்த இந்த நிகழ்வில், இந்தியாவைச் சேர்ந்த இந்திய - வங்க தேச ரிலே அணிகளின் ஆறு வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த அகிலேஷ் மற்றும் தேனியைச் சேர்ந்த ஹரிசங்கர் பங்கேற்று ஆங்கில கால்வாய் எனப்படும் பிரிட்டன் முதல் பிரான்ஸ் வரையிலான 42 கி.மீ., கடல்வழி பாதையை, 12.10 மணி நேரத்தில் நீந்தி கடந்து, குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்து அசத்தியுள்ளனர்.Advertisementhttps://www.youtube.com/embed/DZexVr2-VC4இதில், நங்கநல்லுாரைச் சேர்ந்த 14 வயது அகிலேஷ், ஆங்கில கால்வாயைக் கடந்த இளைய ரிலே நீச்சல் வீரர் என்ற புதிய பட்டத்தையும் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை