உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென் மாநில தடகளம் தமிழகம் முதல் இடம்

தென் மாநில தடகளம் தமிழகம் முதல் இடம்

சென்னை, தென் மாநில ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணி 104 பதக்கங்கள் வென்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ஆந்திர மாநில தடகள சங்கம் சார்பில், 36வது தென் மாநில தடகள போட்டி, ஆந்திராவில் இரு நாட்கள் நடந்தன. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி உட்பட, ஆறு மாநிலங்களைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர், 14, 16, 20 வயதுக்கு உட்பட்டோர் என, மூன்று பிரிவுகளாகப் போட்டியிட்டனர். இதில், தமிழக அணி 51 தங்கம், 28 வெள்ளி, 25 வெண்கலம் என, மொத்தம் 104 பதக்கங்களை கைப்பற்றி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி நாள் போட்டியில், 20 வயதுக்கு ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், போட்டி துாரத்தை 21.41 வினாடிகளில் கடந்து, சென்னையின் யுவராஜ் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், 2021ல், ஆந்திராவின் சண்முக ஸ்ரீனிவாஸ் என்பவர், 21.62 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை