உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய கால்பந்து போட்டி தமிழக அணி அசத்தல்

தேசிய கால்பந்து போட்டி தமிழக அணி அசத்தல்

சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து வரும் தேசிய சப் - ஜூனியர் கால்பந்து போட்டியில், தமிழக அணி, 3-0 என்ற கோல் கணக்கில், மத்திய பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடங்கியது. அகில இந்திய கால்பந்து சங்கம் சார்பில், சப் - ஜூனியர் மாணவர்களுக்கான, 'கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி' சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூரில் உள்ள ஆர்.கே.எம்., ஆஷ்ரம மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 15 மாநில அணிகள், நான்கு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன. இதன் 'டி' பிரிவில், புதுச்சேரி அணியுடன் தமிழக அணி இடம் பெற்றுள்ளது. தமிழக அணி தன் முதல் போட்டியில், மத்திய பிரதேச அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில், தமிழக அணி தன் சிறப்பான ஆட்டத்தால் மூன்று கோல்கள் அடித்தது. முதல் பாதி முடிவில், 3 - 0 என்ற கோல் கணக்கில், தமிழக அணி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் எதிரணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு தராமல், தமிழக அணி பாதுகாப்புத் திசையிலும் சிறப்பாக விளையாடியது. முடிவில், தமிழக அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில், மத்திய பிரதேச அணியை வீழ்த்தி, வெற்றி பயணத்தை தொடங்கியது. தமிழக அணி சார்பில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சோவிக் ஹால்டர் தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ