உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்

தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்

சென்னை:'வாக்கோ இந்தியா' கிக் பாக்சிங் கூட்டமைப்பு சார்பில், தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 22ல் துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில், 10 பெண்கள் உட்பட 47 வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இரு பிரிவிலும், பாயின்ட் பைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட் உள்ளிட்ட பிரிவுகளில் வயது, எடை பொறுத்து போட்டி நடத்தப்பட்டது. அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக அணி, 16 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என, மொத்தம் 41 பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்தமாக நான்காம் இடத்தை வென்றது. இதில் 16 தங்கம் வென்ற வீரர் - வீராங்கனையர், விரைவில் நடக்கவுள்ள ஆசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் 22 தங்கம், 10 வெள்ளி, 23 வெண்கலத்துடன் பஞ்சாப் மாநிலம் முதலிடம் பிடித்தது. இரண்டாமிடத்தை, 20 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலத்துடன் ஹிமாச்சல பிரதேச மாநிலமும், தலா 21 வெண்கலத்துடன் மஹாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை