உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து நெரிசலை தடுக்க தரமணி ரவுண்டானா அகலம் குறைப்பு

போக்குவரத்து நெரிசலை தடுக்க தரமணி ரவுண்டானா அகலம் குறைப்பு

தரமணி, வேளச்சேரி - தரமணி சாலை, நுாறடி அகலம் கொண்டது. கிண்டி, வேளச்சேரியில் இருந்து ஓ.எம்.ஆர்., நோக்கி செல்லும் பெரும்பாலான ஐ.டி., வாகனங்கள், இந்த சாலை மற்றும் எம்.ஜி.ஆர்., சாலை வழியாக செல்கின்றன.எம்.ஜி.ஆர்., சாலை நான்கு வழி சந்திப்பாகும். இதில், நான்கு ஆண்டுளுக்கு முன் செயற்கை நீரூற்றுடன் ரவுண்டானா அமைக்கப்பட்டது. வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்ததால், இந்த ரவுண்டானாவின் அகலத்தை குறைக்க, போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். நெடுஞ்சாலைத் துறை அனுமதியுடன், தற்போது 5 அடி சுற்றளவில் ரவுண்டானா அகலம் குறைக்கப்பட்டது. இதனால், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் சந்திப்பில் இருந்து, வேளச்சேரி மற்றும் வேளச்சேரியில் இருந்து எம்.ஜி.ஆர்., சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், எளிதாக செல்கின்றன. இதனால், நெரிசலும், சிக்னலில் காத்திருக்கும் நேரமும் குறைந்துள்ளது என, போக்குவரத்து போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ