உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாஸ்மாக் கிடங்கு ஊழியர்கள் முற்றுகை

டாஸ்மாக் கிடங்கு ஊழியர்கள் முற்றுகை

-- அம்பத்துார் தொழிற்பேட்டை அருகே, தமிழக அரசு வாணிப கழகத்தின், 'டாஸ்மாக்' கிடங்கு அமைந்துள்ளது. அங்கு, சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர், 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'பணி நிரந்தரம் வேண்டும், தேவையான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கேரளா மாநிலத்தை போல் பில்லிங் மற்றும் விற்பனைக்கு தனித்தனி இடம் வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக, கோஷங்களை எழுப்பினர். போலீசார் பேச்சுக்கு பின், அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !