மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
30-Oct-2024
அம்பத்துார், அம்பத்துார் சரக காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைசேர்ந்த 11 வயது சிறுமி; அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில், மீஞ்சூரைச் சேர்ந்த இளஞ்செழியன், 50, அறிவியல் பாடப் பிரிவில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர், நேற்று முன்தினம், வகுப்பறையில் வைத்து, 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். மாலை, வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்ததை கூற, அதிர்ச்சியடைந்த பெற்றோர், அம்பத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், இளஞ்செழியனை போக்சோ வழக்கில் கைது செய்து, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.
30-Oct-2024