உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாய் கண்டிப்பு இளம்பெண் தற்கொலை

தாய் கண்டிப்பு இளம்பெண் தற்கொலை

திருவொற்றியூர்:திருவொற்றியூர் ராஜாஜி நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தவர்ஷினி, 20, இவர் வீட்டருகேயுள்ள, பள்ளி தோழி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தோழி வீட்டிற்கு சென்று தாமதமாக திரும்பிய அமிர்தவர்ஷினியை, தாய் கண்டித்ததாக தெரிகிறது.இதனால், மன உளைச்சலில் இருந்த அமிர்த வர்ஷினி, தாய் கடைக்கு சென்றிருந்த நேரம் பார்த்து, வீட்டின் மின்விசிறியில் துப்பாட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி