உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா நகரில் கஞ்சா போதை நைட்டியுடன் வாலிபர் அலப்பறை

அண்ணா நகரில் கஞ்சா போதை நைட்டியுடன் வாலிபர் அலப்பறை

அண்ணா நகர், அரசியல் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரை அவதுாறாக பேசும் ஒரு வாலிபரின் வீடியோ, அண்ணா நகர் சைபர் க்ரைம் போலீசாரிடம் கிடைத்தது.அந்த வீடியோவில் இருக்கும் நபர், கஞ்சா புகைத்தபடி அநாகரிகமாக பேசுவதும், தன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பேசி மிரட்டியதும் தெரிந்தது.இது குறித்த அண்ணா நகர் போலீசார் விசாரணையில், அண்ணா நகர், லோட்டர்ஸ் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, இந்த வீடியோ வெளியிட்டது தெரிந்தது.நேற்று காலை, அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை தட்டியுள்ளனர். உள்ளே இருந்த நபர் கதவை திறக்கவில்லை. ஆனால், அரைகுறை ஆடை அணிந்து, 'பாக்சிங்' கையுறையுடன், வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து, ஜன்னல் அருகில் அமர்ந்து, வெளியே நின்ற போலீசாரை அதட்டினார்.பின், வீட்டிற்குள் சென்று, நைட்டி அணிந்து வந்து, தான் 'ரவுடி நைட்டி அமரன் பாய்' எனக்கூறியுள்ளார்.போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அவர்களிடம் தப்ப முயன்றபோது, ஜன்னலில் இருந்து விழுந்து, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.போலீசார், அவரது வீட்டை சோதித்து, அங்கிருந்த மர்ம பொருளை கைப்பற்றி, தடயவியல் துறைக்கு அனுப்பினர்.விசாரணையில், ஓட்டேரியைச் சேர்ந்த ரவுடி கங்கை அமரன், 40, என்பதும், தன்னை ரவுடி என காட்டிக்கொள்ள, 'நைட்டி அமரன் பாய்' எனக்கூறி பலரை மிரட்டி, மாமூல் வசூலித்து வந்ததும் தெரியவந்தது. அண்ணா நகரில் குடியிருந்த வீட்டின் உரிமையாளரையும் மிரட்டி வசித்தது தெரியவந்தது.அதீத கஞ்சா போதையில் இருந்த கங்கை அமரனை, போலீசார் கைது செய்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி