உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளம்பெண்ணுக்கு டார்ச்சர் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

இளம்பெண்ணுக்கு டார்ச்சர் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை ; சமூக வலைதளத்தில் நட்பாக பழகிய, 19 வயது பெண்ணிடம், ஆபாச வீடியோ அனுப்புமாறு 'டார்ச்சர்' செய்த வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணுக்கு, 'ஆன்லைன்' மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசிப், 25, என்பவர், 2024ம் ஆண்டு அறிமுகமாகி உள்ளார். இருவரும் நட்பாக பழகிய நிலையில், அந்த பெண்ணிடம் ஆபாச வீடியோ அனுப்பும்படி, குறுஞ்செய்தி அனுப்பி, முகமது ஆசிப் தொடர்ந்து 'டார்ச்சர்' செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி போலீசார் விசாரித்து, ஆசிப்பை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு, சைதாப்பேட்டை, 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத் து, முகமது ஆசிப்பிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமு ம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !