உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் காயம்

4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் காயம்

வானகரம்:பால்கனி வழியாக வீட்டிற்குள் செல்ல முயன்ற வாலிபர், நான்காவது மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார். மதுரவாயல், அடையாளம்பட்டு மில்லினியம் டவுனில் உள்ள குடியிருப்பின் நான்காவது மாடியில் வசிப்பவர் திருமூர்த்தி, 24. இவர், ஐ.டி., நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாததால், வெளியே சென்று மது அருந்தியுள்ளார். அப்போது, வீட்டு சாவியை தொலைத்துள்ளார். நள்ளிரவு வீடு திரும்பிய அவர், குடியிருப்பின் இடதுபுறம் உள்ள சிறிய பாதை வழியாக பால்கனிக்கு சென்று, கதவை திறக்க முயன்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதுகில் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ