கார் கவிழ்ந்து விபத்து வாலிபர் காயம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் தெருவில், நேற்று வேகமாக வந்த கார், தடுப்பு சுவரின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை பார்த்து பதறிய பொதுமக்கள், உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டனர். அதில் படுகாயமடைந்த சரத், 24, என்பவரை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும், காரில் நால்வர் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், வண்ணாரப்பேட்டை போலீசார், நால்வரும் மது அருந்தி உள்ளனரா என, பரிசோதனை செய்ய இயந்திரத்தை கொண்டு வருவதற்குள், நால்வரும் மாயமானதாக கூறப்படுகிறது. பின், பொதுமக்களின் உதவியுடன், போலீசார் காரை அப்புறப்படுத்தி சாலை ஓரமாக வைத்தனர். இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.