உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நான்கு வயது குழந்தையை சீரழித்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை

நான்கு வயது குழந்தையை சீரழித்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை

திருவள்ளூர்: திரு வள்ளூர் அருகே, 4 வயது குழந்தையை சீரழித்த வாலிபருக்கு, 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவள்ளூர், கடம்பத்துார் ஒன்றியத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 29. இவர், 2018 ஜன., 18ம் தேதி, அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது குழந்தையை, அருகில் உள்ள வீட்டின் மாடிக்கு துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் மகளிர் போலீசார் விசாரித்தனர். திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி உமாமகேஸ்வரி, குற்றம் நிரூ பிக்கப்பட்டதால் கடத்தல், பாலியல் வன்கொடுமை, மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், யுவராஜுக்கு, 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் ரூபாய் நிவார ணம் தமிழக அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !