உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயங்கரவாதிகள் மீண்டும் சிறையில் அடைப்பு

பயங்கரவாதிகள் மீண்டும் சிறையில் அடைப்பு

சென்னை : ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் மீண்டும் புழல் சிறையில் அடைக் கப்பட்டனர். வெடி மருந்துகள் பதுக்கி வைத்து இருந்ததாக, பயங்கரவாதிகள் நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 59, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி, 48, ஆகியோரை, ஆந்திர மாநில போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின், மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைத்து உள்ளனர். அடுத்ததாக, பயங்கரவாதிகளிடம், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்க இருப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ