மேலும் செய்திகள்
கல்வி நிறுவனங்களில் ஓணம் திருவிழா
05-Sep-2025
சென்னை:மெரினா நீலக்கொடி கடற்கரை பரப்பில், மாநகராட்சி சார்பில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மெரினா கடற்கரை, நீச்சல் குளம் அருகில், உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வரும் பொதுமக்களை மகிழ்விக்கவும், தமிழக பாரம்பரிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும், மாநகராட்சி சார்பில் நேற்று மாலை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், நையாண்டி மேளம், கரகம், மயில் ஆட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், களியாட்டம், சாட்டைக்குச்சியாட்டம், துதும்பாட்டம் உள்ளிட்ட கலைகளை, 60 கலைஞர்கள் அரங்கேற்றினர். இந்த நிகழ்ச்சிகளை, பொதுமக்கள் ஆர்வ முடன் பார்வையிட்டனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
05-Sep-2025