உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழையை எதிர்கொள்ள வாரியம் தயார்

மழையை எதிர்கொள்ள வாரியம் தயார்

சென்னை, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய், சென்னையில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்களை, நேற்று பார்வையிட்டார். பின், அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. கழிவுநீர் உந்து நிலையங்கள் தடையின்றி இயங்க, எரிபொருளுடன் ஜெனரேட்டர்கள் தயாராக வைக்கப்படும். மழைக்கு முன், குழாய் பதிக்கும் சாலை துண்டிப்புகளை முடிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலக்காத வகையில், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வினய் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை