கடல் அலையில் சிக்கிய வாலிபர் உடல் மீட்பு
எண்ணுார் மாதவரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 20; கூலித்தொழிலாளி. தீபாவளியன்று நண்பர்களுடன் எண்ணுார் பெரியகுப்பம் கடற்கரையில் குளித்துள்ளார்.அப்போது, அலையில் சிக்கி தமிழ்ச்செல்வன் மாயமாகினார் நண்பர்களும், அப்பகுதி மீனவர்களும், படகுகளில் சென்று தேடி பார்த்தும் பலனில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தமிழ்செல்வன் உடல் சின்னகுப்பம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.