உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 64 சக்தி ரூபங்களில் வராஹி சங்கமம்

64 சக்தி ரூபங்களில் வராஹி சங்கமம்

சென்னை, 'சென்னை மயிலாப்பூரில், 64 சக்தி ரூபங்களில் வராஹி காட்சி அளிக்கும் நிகழ்வு, யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள், மூன்று நாட்கள் நடக்க உள்ளன.மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள, வள்ளல் விநாயக முதலியார் பொம்மை சத்திரத்தில், முதல் முறையாக, 64 சக்தி ரூபங்களில் வராஹி திருக்காட்சி நிகழ்வு நடக்க உள்ளது. ஜன., 3 முதல் 5ம் தேதி வரை நடக்க உள்ள நிகழ்ச்சியில், அன்னை வராஹி அறக்கட்டளை சார்பில், யாகங்கள், பஜனை, சிறப்பு பூஜைகள் மற்றும் சத்சங்கம் நடக்க உள்ளன. இதில் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !