மேலும் செய்திகள்
வளசரவாக்கத்தில் சாலை பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
14-Apr-2025
சின்ன போரூர், வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டில், சின்ன போரூர் மருத்துவமனை சாலை உள்ளது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரேஷன் கடை, மாநகராட்சி மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இப்பகுதியில், பாதாள சாக்கடை பணி முடிந்து, 2023ல் பயன்பாட்டிற்கு வந்தது. இதற்கான குழாய் 25 அடி ஆழத்தில் உள்ளது.பாதாள சாக்கடை பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே, குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டது.அதை சரிசெய்த நிலையில், சில வாரங்களில் மீண்டும் பள்ளம் விழுந்தது. ஓராண்டுக்கு பின், இப்பள்ளம் சரிசெய்யப்பட்டது.இந்நிலையில், அதே இடத்தில் கடந்த ஆண்டு அக்., மாதம், 5 அடி ஆழம் 10 அடி அகலத்திற்கு, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பின், மண் கொட்டி பள்ளம் சீரமைக்கப்பட்டது.தொடர்ந்து பள்ளம் விழுந்துவந்த சாலையில், கடந்த ஆண்டு நவ., மாதம் குப்பை லாரி பாதி அளவு புதைந்தது.குழாய் உடைப்பால், சாலை உள்வாங்குவது அடிக்கடி நடந்ததால், அப்பகுதியில் புதைத்திருந்த குழாய்களை, குடிநீர் வாரிய அதிகாரிகள் மொத்தமாக மாற்றினர்.தவிர, தார்சாலையை அகற்றி கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஏழு லட்சம் ரூபாய் பணி நடந்துவந்தது. மாநகராட்சி சார்பில் நடந்த இப்பணி முடிந்து, மருத்துவமனை சாலையில் கான்கிரீட் சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இரு ஆண்டுகளாக தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கும், பகுதிவாசிகளும் சிரமம் கொடுத்துவந்த சாலைக்கு விடிவு கிடைத்துள்ளது.
14-Apr-2025