உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டுமனையை வாடிக்கையாளரே ஜி ஸ்கொயர்ரில் வடிவமைக்கலாம்

வீட்டுமனையை வாடிக்கையாளரே ஜி ஸ்கொயர்ரில் வடிவமைக்கலாம்

சென்னை,வாடிக்கையாளர்கள், தங்களுக்கான வீட்டுமனையை வடிவமைக்கும் வகையில், புதிய திட்டத்தை 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குடியிருப்பு மனைகளை வடிவமைக்கும் முன்மாதிரியான திட்டத்தை, 'ஜி ஸ்கொயர்' அறிவித்துள்ளது. 'உங்கள் இல்லம், உங்கள் கனவு, உங்கள் தேர்வு' என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் செயல்படுத்தியுள்ள இத்திட்டத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிதி நிலை, வீட்டு மனை அமையும் இடம், வடிவம், எந்த திசையை பார்த்து இருக்க வேண்டும் என்பது போன்ற விருப்பங்களை ஜி ஸ்கொயர் அணியினர், வாடிக்கையாளர்களிடம் கேட்டு பெறுவர். இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுடன் ஆலோசித்து, 'லேஅவுட்' வடிவமைப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்படி, ஒரு மாஸ்டர் பிளான் தயாரித்து, மக்களுக்கான வீட்டு மனைகள் இறுதி செய்யப்படும். சென்னை, புழல் மற்றும் மேடவாக்கம், கோவை மாவட்டம் கோவில்பாளையம் மற்றும் கருமத்தம்பட்டியிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், ''இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களின் தனி விருப்பத்துக்கு ஏற்ப, வீட்டை கட்டும் விருப்பத்தையும் இது போன்ற திட்டங்கள் வாயிலாக செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை