உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காக்கா ஆழி அழிக்கும் பணியை 7ல் துவக்குவதாக அரசு உறுதி

காக்கா ஆழி அழிக்கும் பணியை 7ல் துவக்குவதாக அரசு உறுதி

சென்னை, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு பகுதிகளில், காக்கா ஆழியை அழிக்கும் பணி வரும், 7ம் தேதி துவங்கும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது.'தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், காக்கா ஆழி வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்' என, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு செப்.,30ல் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், 'மழை நீரில் காக்கா ஆழி பெருமளவில் அழிந்து விடும். எனவே, பருவமழை முடிந்த பின், வரும் ஜனவரியில் காக்கா ஆழியை அழிக்கும் பணிகளை துவங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.அதைத் தொடர்ந்து, 'மழை நீரில் காக்கா ஆழி அழிந்து விடும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் உள்ளதா' என்று தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'நீர்வளத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், காக்கா ஆழி இருப்பதால் கொசஸ்தலை ஆற்றில் காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் நீரோட்டம் தடைபடுகிறது.எனவே, வரும், 7ம் தேதி கை முறையாகவோ, இயந்திரங்கள் வாயிலாகவோ, காக்கா ஆழி அழிக்கும் பணிகள் துவங்கும் என கூறப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை வரும், 21ம் தேதி நடக்கும்' என்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை