உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி சென்னைக்கு விஜய யாத்திரை

 சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி சென்னைக்கு விஜய யாத்திரை

சென்னை: சிருங்கேரி மடத்தின் 72வது பீடாதிபதி ஸ்ரீ அபிநவ சங்கர பாரதி சுவாமிகளின் சென்னை விஜய யாத்திரை, டிச., 21ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. ஆதி சங்கரர் தோற்றுவித்த ஐந்து ஆம்னாய பீடங்களில் முதன்மையான சிருங்கேரி சாரதா பீடம், கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம், கூடலியில் அமைந்துள்ளது. இம்மடத்தின், 72வது பீடாதிபதியான ஸ்ரீ அபிநவ சங்கர பாரதி சுவாமிகள், வரும் 21ம் தேதி சென்னையில், விஜய யாத்திரை மேற்கொள்கிறார். மேற்கு மாம்பலம், ஸ்ரீநிவாச பிள்ளை தெரு, வாலாம்பாள் இல்லத்திற்கு வரும் அவர், 31ம் தேதி வரை தங்கி, 10 நாட்கள் பக்தர்களுக்கு தரி சனம் மற்றும் ஆசீர்வதித்து அருளாசி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் எம்.எஸ்.எஸ்., மஹா சுவாமி சத்சங்கம் செய்து வருகிறது. சத்சங்கம் வெளியிட்ட அறிக்கை: இந்தியா வில் உள்ள ஐந்து ஆம்னாய பீடங்களில் ஒன்றாக, சிருங்கேரி சாரதா பீடம் விளங்குகிறது. இங்குள்ளகோவிலில், சாரதாம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அந்த மத்தின் பீடாதிபதி ஸ்ரீ அபிநவ சங்கர பாரதி சுவாமிகளின் சென்னை விஜய யாத்திரை, 10 நாட்கள் நடக்கிறது. இந்த ஆன்மிக பயணத்தின்போது, சென்னை, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, சுவாமிகளின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !