உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரை ராடால் அடித்து மொபைல் பறித்தவர் கைது

வாலிபரை ராடால் அடித்து மொபைல் பறித்தவர் கைது

சென்னை, மெரினா லுாப் சாலையில் நடந்து சென்ற வாலிபரை வழிமறித்து, இரும்பு ராடால் தாக்கிவிட்டு, மொபைல் போன் பறித்துச் சென்ற இருவரில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.அம்பத்துார், திருமுல்லைவாயலை சேர்ந்தவர் கருடகுமார், 20. கடந்த, 28ம் தேதி அன்று மாலை, 5:30 மணியளவில், மெரினா லுாப் சாலையில் நடந்து சென்றார்.அப்போது, இரண்டு மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, சிறிய அளவிலான இரும்பு ராடால் தலையில் தாக்கிவிட்டு, அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, மொபைல் போன், பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். தலையில் ரத்தம் சொட்டிய நிலையில், மெரினா காவல் நிலையத்தில், கருடகுமார் புகார் அளித்தார். உடனே, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடம் மயிலாப்பூர் என்பதால், வழக்கு விசாரணை அங்கு மாற்றப்பட்டது.தீவிர விசாரணையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அஜய், 20 என்பவர் மொபைல் பறித்ததும், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் தங்கி, மாடி ரயிலில் மொபைல் போன் கவர் விற்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ