மேலும் செய்திகள்
பெற்றோரை தவறவிட்ட சிறுமி மீட்பு
14-Sep-2024
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில், அதே பகுதியைச் சேர்ந்த பெண், மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, 'டியோ' ஸ்கூட்டரில் பின்னால் வந்த மர்ம நபர், பெண்ணின் போனை பறித்துச் சென்றார்.இதுகுறித்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறை வாயிலாக, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பூந்தமல்லியில் வந்து கொண்டிருந்த வாலிபரை, போலீசார் மடக்கிப் பிடித்தனர்.கே.கே.நகரைச் சேர்ந்த ஜெபராஜ், 28, என்ற வழிப்பறி ஆசாமியை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
14-Sep-2024