உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரியை கழுவியவர் ஏரியில் மாயம்

லாரியை கழுவியவர் ஏரியில் மாயம்

சென்னை, ஆயுத பூஜை கொண்டாட, லாரியை ஏரியில் கழுவிய வாலிபர், நீரில் மூழ்கி மாயமானார்.குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லுாரைச் சேர்ந்தவர் கார்த்திக், 28; ஓட்டுனர். இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே, தனியாருக்கு சொந்தமான 'ஈச்சர்' லாரியை ஓட்டி வருகிறார்.ஆயுத பூஜை கொண்டாட, லாரியை நல்லுார் ஏரிக்கு நேற்று கொண்டு சென்று, தந்தை சிவகுமாருடன் சேர்ந்து கழுவினார். அப்போது, ஏரியில் குளித்த கார்த்திக், நீரில் மூழ்கி மாயமானார். இதைப் பார்த்து அதிர்ச்சியான அவரது தந்தை, சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து, ஏரியில் மாயமான கார்த்திக்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி