உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பரந்துார் போராட்டம் முடிவுக்கு வருகிறது

பரந்துார் போராட்டம் முடிவுக்கு வருகிறது

ஏகனாபுரம், பரந்துாரில் அமையவுள்ள பசுமைவெளி விமான நிலையம் வேண்டாம் என, ஏகனாபுரம் கிராமத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் நேற்றுடன் 966வது நாளை நிறைவு செய்துள்ளது.இந்த கிராமத்தினருக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் களம் இறங்கியுள்ளனர். சட்டப்போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.இந்த இரவு போராட்டத்தை 1,000 நாளுடன் நிறைவு செய்ய இருப்பதாகவும், இது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தெரிவிக்க உள்ளதாகவும், போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி