உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசாளரை தாக்கியவர் கைது

காசாளரை தாக்கியவர் கைது

சென்னை, ராமாபுரம், திருமலைநகரில் டாக்சி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, திண்டுக்கல்லைச் சேர்ந்த பூபதி, 30, என்பவர் காசாளராக பணியாற்றுகிறார்.இந்நிறுவனத்தில், 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 3ம் தேதி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த செல்வம், 53, என்பவர் மதுபோதையில் பணிக்கு வந்ததால், அவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை.கடந்த, 5ம் தேதி, பூபதியிடம் செல்வம் பணம் கேட்டுள்ளார். பூபதி பணம் தர மறுத்ததால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ராமாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ