உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  திருநங்கை எதிர்கொண்ட பிரச்னை நவீன உயிரி திசு சிகிச்சையால் தீர்வு

 திருநங்கை எதிர்கொண்ட பிரச்னை நவீன உயிரி திசு சிகிச்சையால் தீர்வு

சென்னை: செயற்கையாக மாற்றியமமைக்கப்பட்ட பிறப்புறுப்புக்கும், பெருங்குடல் பாதைக்கு இடையே துவாரம் ஏற்பட்டு, இயல்புக்கு மாறாக முன்பகுதியில் கழிவு வெளியேறிய திருநங்கையை, ராமாபுரம் எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை டாக்டர்கள் குணப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனையின் இரைப்பை குடலியல் மற்றும் கல்லீரல் துறை தலைவர் அருள்பிரகாஷ், முதுநிலை டாக்டர் தருண் ஜே.ஜார்ஜ் ஆகியோர் கூறியதாவது: சென்னையை சேர்ந்த, 22 வயதான திருநங்கை, மற்றொரு மருத்துவமனையில் பாலினத்தை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சில நாட்களில், செயற்கையாக மாற்றியமைக்கப்பட்ட பிறப்புறுப்புக்கும், பெருங்குடல் பாதைக்கும் இடையே துவாரம் ஏற்பட்டது, இயல்புக்கு மாறாக முன்பகுதியில் இருந்து, மலக்கழிவு வெளியேறின. மிகவும் அரிதான பாதிப்புக்கு, தமிழகத்திலேயே முதன்முறையாக, 'பொவைன் பெரிகார்டியல் பேட்ச்' எனும் பசு மாட்டின் இதயத் தசையில் இருந்து தயாரிக்கப்படும் உயிரித் திசு பயன்படுத்தி, 'எண்டோஸ்கோபி' சிகிச்சை முறையில் சரி செய்யப்பட்டது. 100ல் ஒரு சதவீதம் பேருக்கு அரிதாகவே இதுபோன்ற பிரச்னை வரக்கூடும். தற்போது, அத்திருநங்கை நோயாளி நலமுடன் வீடு திரும்பினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ