உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சத்தீஸ்கரை தெறிக்க விட்ட பஞ்சாப் தேசிய சீனியர் ஹாக்கியில் அபாரம்

சத்தீஸ்கரை தெறிக்க விட்ட பஞ்சாப் தேசிய சீனியர் ஹாக்கியில் அபாரம்

சென்னை, ஹாக்கி தேசிய சீனியர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது. போட்டியில், தமிழகம் உட்பட 31 மாநில அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று காலை நடந்த போட்டியில், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதின. போட்டி துவங்கிய, 5வது நிமிடத்தில், 'பீல்டு' கோலுடன் முதல் கோலையும், 15வது நிமிடத்தில் மற்றொரு கோலையும் அடித்த பஞ்சாப் அணி துவக்கத்திலேயே முன்னிலை பெற்றது. தொடர்ந்து, திறமையான 'பாஸிங்' மற்றும் அபாரமான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தி, போட்டியின் முதல் பாதியில் 4 - 0 என்ற கணக்கில் பஞ்சாப் முன்னிலையை தக்க வைத்தது.சத்தீஸ்கர் அணிக்கு, 44வது நிமிடத்தில் 'பெனால்டி ஸ்ட்ரோக்' வாயிலாக ஒரு கோல் கிடைக்க, கோல் கணக்கு 5 - 1 என்றானது. இருப்பினும், பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டத்தை சத்தீஸ்கர் அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும்பாலான வேளைகளில் பந்து, பஞ்சாப் அணியின் கட்டுப்பாட்டிலே இருந்தது. மேலும் ஐந்து கோல்கள் அடிக்க 10 - 1 என்ற கோல் கணக்கில், பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் அணி, 4 - 3 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேசம் அணியையும், ஒடிசா அணி, 6 - 2 என்ற கணக்கில் புதுச்சேரி அணியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ