வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்து கோவில் சிலை கடத்தலில் முஸ்லிம்களுக்கு என்ன ஈடுபாடு ?? இது ஹராம் இல்லையா ???
சென்னை, :கொலைக்கு சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வந்த ரவுடி கும்பலுக்கு போலீசார் குறி வைத்தபோது, கோடிக்கணக்கான ரூபாய்க்கு சுவாமி சிலைகளை விற்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித்ராஜ், 34; கொடூர குற்றங்களை செய்யும் 'ஏ பிளஸ்' ரவுடி.அவரை, ஆக., 13ல் கைது செய்ய முயன்றபோது, பீட் பாட்டிலை உடைத்து போலீசாரை தாக்க முயன்றதால், எஸ்.ஐ., கலைச்செல்வி துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார். இதையடுத்து, அவரின் கூட்டாளிகள் குறித்து, அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். திட்டம்
அப்போது, டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் எபினேசர், 27, என்பவர் ரோஹித்ராஜின் வலது கரமாக செயல்பட்டு வருவது தெரியவந்தது.மேலும், அவரது தலைமையிலான ரவுடி கும்பல், ரோஹித்ராஜின் எதிரி ஒருவரின் உயிருக்கு குறி வைத்து, கொலைக்கு சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வந்ததையும், போலீசார் துப்பு துலக்கினர். இதையடுத்து, ஆகாஷ் எபினேசரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரின் மொபைல் போனை வாங்கி, ரவுடிகளுக்கு இடையே நடந்த தகவல் தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர்.அப்போது, அவருக்கு, சென்னை ஆவடியைச் சேர்ந்த இர்ஷித் அகமது, 48, என்பவர், 'வாட்ஸாப்'பில், மூன்று சிலைகளின் படங்களை அனுப்பி, பல கோடி ரூபாய்க்கு இவற்றை விற்கலாம் என, தகவல் அனுப்பியிருப்பது தெரியவந்தது.இதையடுத்து, இர்ஷித் அகமது பின்னணி குறித்து போலீசார் விசாரித்தனர். அவர் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளி என்பது தெரியவந்தது.இதையடுத்து, ஆகாஷ் எபினேசர் வாயிலாக, 'வாட்ஸாப்'பில், இர்ஷித் அகமதுவிடம் 'சாட்டிங்' செய்து, அவரை நேரில் வரவழைக்க போலீசார் திட்டமிட்டனர். விசாரணை
தொடர்ந்து தகவல் பரிமாற்றியபோது, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ராஜேஷ், 45, சென்ட்ரல் அருகே, மூர் மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். அவரின் கட்டுப்பாட்டில் தான், 1.5 அடி உயரமுள்ள முருகன் சிலை, தலா 1 அடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை சிலைகள் உள்ளன. நானும் அவரும், சிலைகளுடன் இருசக்கர வாகனத்தில், டி.பி.சத்திரம் மதினா பள்ளிவாசல் அருகே வந்துவிடுவோம். நீங்கள் அந்த இடத்தில் காத்திருங்கள் என, ஆகாஷ் எபினேசருக்கு தகவல் அனுப்பி உள்ளார்.அதன்படி, சிலைகளுடன் வந்த இர்ஷித் அகமது, ராஜேஷ் ஆகியோரை, டி.பி.சத்திரம் காவல் நிலைய எஸ்.ஐ., சங்கருடன் சேர்ந்து, அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர்.அவர்களிடம், 150 ஆண்டு பழமையான முருகன், வள்ளி, தெய்வானை என, மூன்று உலோகச்சிலைகள் இருந்தன. இச்சிலைகளை, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றதும், அவர்கள் சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்து கோவில் சிலை கடத்தலில் முஸ்லிம்களுக்கு என்ன ஈடுபாடு ?? இது ஹராம் இல்லையா ???