லாரியின் பின்னால் மோதி வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே முத்துரெட்டிகண்டிகை கிராமத்தில் வசித்தவர் அஜித், 22. இவரது நண்பர் சதீஷ், 23. இருவரும், நேற்று முன்தினம் இரவு கவரைப்பேட்டையில் இருந்து புதுவாயல் நோக்கி 'ராயல் என்பீல்ட்' பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர். பைக்கை அஜித் ஓட்டினார்.பெருவாயல் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அஜித், லாரியின் பின்னால் மோதினார்.பலத்த காயங்களுடன் மருத்துவமனை செல்லும் வழியில் அஜித் உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சதீஷ் உயிர் தப்பினார்.கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.