உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாசர்பாடி பள்ளியின் அவலம்; அரசு துறைகளுக்கு ஐகோர்ட் குட்டு

வியாசர்பாடி பள்ளியின் அவலம்; அரசு துறைகளுக்கு ஐகோர்ட் குட்டு

சென்னை : வியாசர்பாடி, கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை; ஆய்வகம் பராமரிப்பு இல்லை, பள்ளியை சுற்றி புகையிலை பொருள் விற்பனை நடப்பதாக, பத்திரிகையில் செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மாநகராட்சி பள்ளியை ஆய்வு செய்து, குடிநீர், கழிப்பறை வசதிகள் அளிக்கவும், வளாகத்தைச் சுற்றி புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடும் வகையில், இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு விசாரணைக்கு எடுத்தது.அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர்; சென்னை மாநகராட்சி தரப்பில், வழக்கறிஞர் அஸ்வினிதேவி ஆஜராகி, 'நோட்டீஸ்' பெற்று கொண்டனர்.போலீஸ் தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.குமரேசன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகினர்.விசாரணையை, இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து, அரசு, மாநகராட்சி மற்றும் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, முதல் அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி