உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டுனர் மன்னிப்பு கேட்க பஸ்சை வழிமறித்த பெண்

ஓட்டுனர் மன்னிப்பு கேட்க பஸ்சை வழிமறித்த பெண்

ஒட்டியம்பாக்கம், காரணை- - சைதாப்பேட்டை செல்லும் தடம் எண்: '51பி' அரசு பேருந்து, ஒட்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், நின்று கொண்டிருந்தது.நேற்று முன்தினம் இரவு, ஒரு பெண் பயணி ஏற முயன்றபோது, ஓட்டுனர் தேவராஜ் பேருந்தை நகர்த்தியுள்ளார். இதனால், அந்த பெண் பயணிக்கு காயம் ஏற்பட்டது.இதையடுத்து, ஓட்டுனருக்கும், பெண் பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பெண் பயணியை, ஓட்டுனர் மரியாதை குறைவாக பேசியுள்ளார்.பேருந்தில் இருந்த மற்றொரு பெண் பயணி நித்தியபிரயா என்பவர், காயமடைந்த பெண்ணிடம் மரியாதை குறைவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஓட்டுனரிடம் கூறினார். இதற்கு மறுத்த தேவராஜ், நித்தியபிரயாவிடமும் மரியாதை குறைவாக பேசியுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய நித்தியபிரியா, பேருந்தின் முன்புறம் நின்று மறியல் செய்தார். அவரை ஓரம் கட்டி, பேருந்தை சைதாப்பேட்டை நோக்கி தேவராஜ் இயக்கினார்.மற்றொருவர் ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து வந்த நித்தியபிரியா, அரசன்கழனி பகுதியில் பேருந்தை மீண்டும் வழிமறித்தார். பேருந்தின் முன் வாகனத்தை நிறுத்தி, மன்னிப்பு கேட்க வேண்டும் என, பிடிவாதமாக நின்றார். ஓட்டுனரும் அசரவில்லை.பேருந்து, சாலை நடுவே நின்றிருப்பது குறித்து தகவல் அறிந்து, பெரும்பாக்கம் போலீசார் அங்கு விரைந்தனர். பயணியரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து, ஓட்டுனரிடம் விசாரிக்க காவல் நிலையம் அழைத்து சென்றனர்.நடுவழியில் நின்ற பேருந்தில் இருந்த பயணியர், வேறு வழியின்றி மாற்று பேருந்தில் புறப்பட்டு சென்றனர். ஓட்டுனர், பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட பின், 20 நிமிடங்கள் கழித்து, அவரை போலீசார் விடுவித்தனர். அவர், காலி பேருந்துடன் சைதாப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
அக் 20, 2024 18:58

மக்கள் சேவை செய்யும் ஓட்டுநர்களுக்கு பொறுமை அன்பு இருக்க வேண்டும்.


Padmasridharan
அக் 20, 2024 16:24

அந்த வீர பெண்மணி ? மற்றும் அந்த தெனாவட்டு காக்கி சட்டைகள் ? இல்லாமல் செய்தியா ?


Anantharaman Srinivasan
அக் 20, 2024 14:38

பணியில் பாதியில் பஸ்ஸை விட்டு கிழே இறங்கியது தவறு. புகார் போலீஸ் வரை சென்ற தேவராஜ் மீது அரசு போக்குவரத்து கழகம் எடுக்க போகும் நடவடிக்கை என்ன..??


B N VISWANATHAN
அக் 20, 2024 11:38

கட்சி ஆதரவுடன் தொழில் சங்கங்கள் இருக்கிற வரைக்கும் பணியாளர்களை திருத்தவே முடியாது


VENKATASUBRAMANIAN
அக் 20, 2024 08:23

முதலில் அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். அந்த டிரைவரை சஸ்பெண்டு செய்ய வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 20, 2024 10:15

இறைந்து சொல்லாதீர்கள். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அந்தப்பெண் மீது குண்டாஸ் போட்டு விடுவார்கள். அப்புறம் கஞ்சா இருந்திச்சின்னு சொல்லுவாங்க


நிக்கோல்தாம்சன்
அக் 20, 2024 07:49

இனி அந்த தேவராஜ் பணியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 20, 2024 10:14

அவருக்கு பதவி உயர்வு கொடுப்பார்கள். அவர் உ பி யாக இருக்கக்கூடும். அந்த தைரியத்தில்தான் மன்னிப்பு கேட்க மறுத்திருப்பார்.


Kanns
அக் 20, 2024 07:42

Grave Injustice by AntiMen WomenBiased Police. Sack& Punish such Unwanted Police


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை