மேலும் செய்திகள்
996 மகளிர் குழுக்களுக்கு ரூ.96.20 கோடி கடன்
15-Jun-2025
சென்னை உலக மகளிர் சங்கம் சார்பில், அக்., 27ல், சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் துவங்க உள்ளன.உலக மகளிர் சங்கம் சார்பில், 2022ம் ஆண்டில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடந்தன. அதில், லிண்டா ப்ருஹ்விர்டோவா ஒற்றையர் பட்டத்தையும், கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி மற்றும் லுாயிசா ஸ்டெபானி ஆகியோர் இரட்டையர் பட்டத்தையும் வென்றனர்.இந்நிலையில், மூன்றாண்டுகளுக்குப்பின், வரும் அக்., 27 முதல், சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் திடலில், மீண்டும் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இதற்கான முடிவு, அமெரிக்காவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதை, தமிழக டென்னிஸ் சங்கமும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் ஒருங்கிணைக்கின்றன.
15-Jun-2025