உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் தீபிகா, 23. இவர், ஹரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, பள்ளிக்கரணையில் வசித்து வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 11ம் தேதி, அவரது முன்னாள் காதலன் ஜெயக்குமார் அங்கு வந்து, தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரை விசாரித்த புளியந்தோப்பு போலீசார், புளியந்தோப்பு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார், 21, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
அக் 14, 2024 03:09

23 வயசு பெண்ணுக்கு முன்னாள் காதலன் 21 வயதில் , எங்கே போயிட்டிருக்கு தமிழகம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை